அதிரையில் நகராட்சி கடைகள் ஏலம் தொடர்பாக இன்று அவசர கூட்டம் கூட்டப்பட்ட நிலையில் அதில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிழைகள் உள்ளன.
நகர் மன்ற தீர்மான எண் 180: நாள் 6.11.23ன்படி ஒப்படைக்கும் நாள் முதல் ஒன்பது வருடத்திற்கு இந்நகராட்சிக்கு சொந்தமானதும் பாத்தியப்பட்டதுமான பேருந்து நிலையத்தில் உள்ள B01 முதல் B10 வரை (மார்க்கெட் சாலை) பகுதி கடைகளுக்கும் 7.11.2023 தேதியன்று ஒப்பந்தப்புள்ளி ஏலம் கோரப்பட்டது. அவ்வாறு ஒப்பந்தப்புள்ளி / ஏலம் கோரப்பட்டதில் பேருந்து நிலையத்தில் உள்ள B01 கடைக்கு கிழக்கண்டவாறு ஒப்பந்தப்புள்ளி வரப்பெற்றுள்ளது. ஏலத்தில் எவரும் கலந்து கொள்ளவில்லை." என்று குறிப்பிட்டு பின் வரும் பெயர்களை பட்டியலிட்டுள்ளது.
அதில் முதல் கட்டத்துக்கு கீழே உள்ள பத்தியில் குறைவான அதிக ஒப்பந்த புள்ளி தொகையை தெரிவித்த இர்பானுதீன் என்பவரின் பெயரை குறிப்பாமல் பிரபாகரன் என்பவருடைய பெயர் அச்சிடப்பட்டு உள்ளது. ஆனால், அலுவலகக் குறிப்பில் இர்பானுதீன் என்று பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.