அதிரை மக்களுக்கே தெரியாமல் ரகசியமாக நகராட்சி கடைகள் ஏலமா? கொந்தளிக்கும் வியாபாரிகள்

Editorial
0
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான 24 கடைகள் உள்ளன. பல மாதங்களாக இந்த கடைகள் ஏலம் விடப்படாமல் பூட்டப்பட்டு கிடந்தன. இதனை ஏலம் விட்டு வியாபாரிகள், பொதுமக்கள் பயனடையும் வகையில் செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று முறையான முன்னறிவிப்பு இன்றி இன்று மாலை அதிரை நகராட்சி கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படுவதாக அதிரை பிறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஆளும் கட்சி மற்று எதிர்கட்சி கவுன்சிலர் 3 பேரிடம் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.

அதேபோல் நகராட்சி ஆணையரிடம் செல்போனில் விசாரித்தபோது, தினகரன் என்ற நாளிதழில் 15 நாட்களுக்கு முன்பே விளம்பரம் செய்யப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். தனக்கு அப்படி விளம்பரம் செய்தது தெரியாது மேடம், எந்த தேதியில் நடைபெறுகிறது என்று விசாரித்தபோது அழைப்பை அவர் துண்டித்துவிட்டாராம். மீண்டும் தொடர்புகொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை.

இதற்கிடையே நகராட்சியில் பெயர் சொல்ல விரும்பாத மற்றொரு ஊழியரிடம் விசாரிக்கையில் இன்று மாலையே ஏலம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். வரி செலுத்துவதற்காக மட்டும் ஆட்டோ, நோட்டீஸ், வீடு வீடாக சென்று விளம்பரம் செய்யும் நகராட்சி ஒரே ஒரு நாளிதழில் மட்டும் விளம்பரம் செய்தால் போதுமா? உள்ளூர் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், ஆட்டோ அறிவிப்புகள் மூலம் தெரிவிக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுமக்கள், வியாபாரிகளுக்கு முறையாக அறிவிப்பு செய்யாமல் தங்களுக்குள் கடைகளை ஆளுங்கட்சியினர் பிரித்துகொள்ளும் முயற்சியில் இவ்வாறு அவசர கெதியில் ஏலம் நடத்தப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே  இந்த ஏலத்தை ஒத்தி வைத்து முறையாக விளம்பரம், அறிவிப்பு செய்து ஏலம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...