அதிரை: நகராட்சி கடைகள் ஏலம் விடப்பட்டதில் மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீட்டை அதிரையை சேர்ந்த பயனாளிக்கு வழங்காமல் வேறு ஊரை சேர்ந்தவருக்கு வழங்கியதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் புகாரளித்து உள்ளது.
அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது, "அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வாடகை கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிக்கும் இட ஒதுக்கீடு படி வழங்க வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. ஆனால் அதிராம்பட்டினம் நகராட்சி இதுவரை பொது ஏளமோ பொது அறிவிப்பு அறிவிக்கப்படாமல் அந்த வாடகை கட்டிடங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினத்தில் சுமார் 400 மாற்றுத்திறனாளிக்கு மேல் உள்ளனர்.
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தான் அந்த நகராட்சி கட்டிடத்தில் இட ஒதுக்கீடு படி வழங்க வேண்டும். வேறு எந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக் கூடாது ஏனென்றால் அந்தந்த இடங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வு முன்னேறுவதற்கு தான் அரசு மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, ஊராட்சி இவர்கள் கட்டப்படும் வாடகை கட்டிடங்களில் அந்தந்த ஊரைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு படி வழங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆனால் அதிராம்பட்டினம் நகராட்சி பொது அறிவிப்பு ஏதும் செய்யாமல் கட்டிடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளனர்.