கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நமது அதிரை பிறையில், "அதிரை நகராட்சியின் லட்சணம் இதான்.. ஒற்றை படத்தில் உணரலாம்" என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம். அதில், "கீழ்காணும் இந்த ஒற்றை படமே போதும், அதிரை நகராட்சியின் அவலத்தை உணர்த்த. வேறு வரிகளே வேண்டாம்." என்று குறிப்பிட்டு பின்வரும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தோம்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. பலரும் நகராட்சி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் தற்போது இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. நகராட்சி அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மழை நீர் வடிகாலை பராமரிக்க டெண்டர் விடுவதாக அறிவித்து உள்ளது. விரைவில் இது மூடப்படும் என்று நம்பலாம்.
இதுபோல் உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அதிரை பிறை தளத்தில் உள்ள வாட்ஸ் அப் பட்டனை கிளிக் செய்து மெசேஜ் அனுப்பலாம்.