அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பி.காம் 3வது ஆண்டு படித்து வந்த மாணவர் முஹம்மது ஃபவாஸ். வயது 19. அதிரை நெசவுத்தெரு மர்ஹூம் யூசுப் ஹஜ்ரத் அவர்களின் பேரனான இவர் நேற்று காலை சுமார் 11 மணியளவில் காதர் முஹைதீன் பள்ளி அருகே ஏரிப்புறக்கரை சாலையில் விபத்தில் சிக்கி வஃபாத்தானார்.
இந்த நிலையான அன்னாரின் உடல் நல்லடக்க விபரத்தை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சின்ன நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் அகமது லெப்பை, முன்னால் பெரிய ஜும்மா பள்ளி ஹத்தீஃப் மர்ஹூம் யூசுஃப் ஆலிம் இவர்களின் பேரனும், முகம்மது சாஃபி அவர்களின் சகலை மகனும், அப்துல் ரஹ்மான், சேக் நசுருதீன் இவர்களின் மருமகனும், ராவுத்தர் என்கிற முகம்மது சாலிஹ் அவர்களின் தம்பி மகனும், அப்துல்லாஹ் அவர்களின் மகனும், ஃபயாஸ், ஃபர்ஹான் இவர்களின் மூத்த சகோதரருமான ஃபவாஜ் அவர்கள் நேற்று 24/12/2023 ஞாயிற்றுக் கிழமை மதியம் 1:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 25/12/2023 திங்கள் கிழமை அசர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.