அதிரையில் இரவில் டெலிவரிக்கு வரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவன ஊழியர்கள்.. நேர கட்டுப்பாடு வருமா?

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon



இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காலை எழுந்தவுடன் பல் துலக்க பயன்படும் பசை தொடங்கி இரவு தூங்க வைக்கும் கொசு வத்தி வரை அனைத்தும் ஆன்லைன் ஆகிவிட்டது. அதிரையில் ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா, மீஷோ போன்ற தளங்களில் ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் வாங்குகின்றனர்.

இதனால் அதிரையிலேயே ஆன்லைன் தளங்களின் டெலிவரி பாய்ஸ்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் பொருட்களை வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர். இதில் இதுவரை தவறு நடக்கவில்லை என்றாலும் டெலிவரி செய்யும் நேரத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்கிறார்கள் பொதுமக்கள். 

பகல் நேரங்களில் அல்லாமல் இரவு 9 மணிக்கு மேல் கூட டெலிவரி பாய்ஸ்கள் வீடுகளுக்கு வருவதால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனை டெலிவரி செய்யும் உரிமம் பெற்றுள்ளவர்கள் அதிரையில் மாலை 6 மணிக்கு மேல் டெலிவரி செய்வதை தவிர்க்கலாம்.

சில செயலிகளில் அலுவலக நேரத்தை பதிவு செய்து அந்த நேரத்தில் வர வைக்கும் ஆப்ஷன்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், மேற்குறிப்பிட்டதைபோல குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு எல்லா நிறுவனங்களும் அதிரையில் டெலிவரி செய்வதை தவிர்க்கலாம்.




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...