அதிராம்பட்டினம் வாய்கால் ஸ்கூல் எனப்படும் நடுத்தெரு நடுநிலைப்பள்ளிக்கு மாநில திட்டக்குழு திட்டத்தில் 69 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கும் மற்றும் பள்ளி பராமரிப்புக்காக ரூ.24.50 லட்சத்தில் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பள்ளிக்கும் முன் பகுதியில் உள்ள காலி இடத்தில் இந்த வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவரின் கணவர் MMS.அப்துல் கரீம், நகராட்சி துணைத் தலைவர் இராம.குணசேகரன், ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் முஹம்மது சாலிஹ், நகராட்சி கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.