அதிரையில் சாலை விபத்து.. கல்லூரி மாணவர் முஹம்மது ஃபவாஸ் (வயது 19) வஃபாத்

Editorial
0
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பி.காம் 3வது ஆண்டு படித்து வரும் மாணவர் முஹம்மது ஃபவாஸ். வயது 19. அதிரை நெசவுத்தெரு மர்ஹூம் யூசுப் ஹஜ்ரத் அவர்களின் பேரனான இவர் இன்று காலை சுமார் 11 மணியளவில் காதர் முஹைதீன் பள்ளி அருகே செல்லும் சாலையோரம் பைக்கில் நின்றுகொண்டு இருந்ததாகவும், அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக அவரை மீட்டு தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிர் பிரிந்தது. இது குறித்து விபத்து நேர்ந்த இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 19 வயது இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிரை மக்களை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது.

குறிப்பு: சாலை விபத்தால் உயிரிழந்த மாணவன் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புகைப்படத்தை பகிராதீர்கள். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், இதயம் பலவீனமானவர்கள், இளைஞரின் குடும்பத்தினர் மனதளவில் பாதிப்பு ஏற்படலாம்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...