இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இதனை கைப்பற்ற நகராட்சி முடிவு செய்தது. இதனை அடுத்து உலமாக்கள், நிர்வாகியை வெள்ளிக்கிழமை அழைத்து விடுமுறை அறிவிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. சனிக்கிழமை காலை நகராட்சி அதிகாரிகள் நிலத்தை கைப்பற்ற பதாகையுடன் வந்தனர்.
பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அங்கு திரண்டு பதாகையை வைக்க அனுமதி தராமல் எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்ப்பு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த விசாரணை நீதிமன்றத்தை நாடி Execution petition வழங்கி நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர், முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகே அதை கையகப்படுத்தப்பட வேண்டும் என சட்டம் இருப்பதால் இவ்வாறு செய்ய முடியாது என தெரிவித்த பிறகு பதாகை நகராட்சி அதிகாரிகள் வைக்காமல் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து இது விசயமாக மனு கொடுக்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் தஞ்சாவூர் சென்றுள்ளனர். இதற்கிடையே பள்ளி கதவில் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளது. அதில் 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என கெடு விதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 4 ஆம் தேதி ஒட்டப்பட்ட நோட்டீசுக்கு பொய்யாக நவம்பர் 30 ஆம் தேதி என்று குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. இதில் 15 நாள் கெடு என குறிப்பிடப்பட்டு இருந்தாலும் நோட்டீஸ் ஒட்டும் தேதி நவம்பர் 30 என்று குறிப்பிட்டு இருப்பயால் அவகாசம் 10 நாட்கள் என்றே கணக்கில் வருகிறது. இன்று ஒட்டும் நோட்டீஸுக்கு ஏன் தேதி நவம்பர் 30 என உள்ளது என சமூக ஆர்வலர் பைசல் நகராட்சி ஊழியர்களிடமே கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் எந்த விளக்கமும் தராமல் நோட்டீஸ் ஒட்டிச் சென்று உள்ளார்கள்.