அதிரை நகராட்சிக்கு TNTJ எச்சரிக்கை.. நாய்கள், மாடுகளை தடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு

Editorial
0
அதிரையில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை.

அதேபோல் அதிரையில் கால்நடைகள் வளர்த்து வரும் பொது மக்கள், தங்களது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை வீடுகளில் கட்டிப்போடாமல், பிரதான சாலையில் தினமும் சுற்றி திரிய விடுகிறார்கள். இதனால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகிறது. பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் சாலைகளில் சானம் இடுவதால் சுகாதார கேடு மற்றும் சாலை விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துகள் மற்றும் பொருட்கள் சேதம் ஏற்பட காரணமாகவும் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளையும், நாய்களையும் நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...