இதற்காக போதிய இட வசதி இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. பேருந்து நிலைய கடைகள் அமைப்பில் உள்ள குளறுபடிகள் காரணமாக வணிக வளாகத்தில் ஒரு கடை கூட திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதும் அதிரை மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சரி விசயத்துக்கு வருவோம். அதிரை பேருந்து நிலையம் என்பது பல ஆண்டுகால வரலாற்று சிறப்புகளை கொண்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு ஹாஜி எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் நினைவு பேருந்து நிலையம் என்ற பெயர் இருந்துள்ளது. ஆனால், பெயர் பலகைகள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக காலப்போக்கில் அந்த பெயர் மறைந்துவிட்டது.
ஹாஜி எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் அதிராம்பட்டினம் சேர்மனாக பதவி வகித்தவர். ஆளுமையும் ஆற்றலும் மிக்க இவர்களின் பெயரே பிற்காலத்தில் பேருந்து நிலையத்திற்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இன்றைய தலைமுறைக்கு அந்த பெயரே மறந்துபோய்விட்டது. பேருந்து நிலைய மேம்பாட்டுக்கு நிதி வழங்கிய எம்பி, முன்னாள் எம்.எல்.ஏ பெயர்கள் மட்டுமே தற்போது உள்ளன.
பழைய புகைப்படம்:
தற்போது அதிரை நகராட்சித் தலைவராக எம்.எம்.எஸ். குடும்பத்தை சேர்ந்த தாஹிரா அம்மாள் அவர்களே பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் அதிரையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவரான ஹாஜி எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் பெயர் பலகை பேருந்து நிலையத்தில் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.