அதிரை இமாம் ஷாபி மெட்ரிகுலேசன் பள்ளியில் நாளை (நவம்பர் 4 - சனிக்கிழமை) மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி இரு அமர்வாக நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான முதலாவது அமர்வு காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. பெற்றோர்களுக்கான அமர்வு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
இதில் சமூக நீதி மாத இதழ் ஆசிரியரும் கல்வியாளருமான சி.எம்.என்.சலீம், பட்டுக்கோட்டை மண்டல வருவாய் அதிகாரி அக்பர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.முஹம்மது இஸ்மாயில் ஆகிய கலந்துகொள்ள உள்ளார்கள்.