அதிரையில் இன்று நடைபெற உள்ள நகர சபை கூட்டத்தில் 3 கிராமங்களை இணைக்கும் தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக மழவேனிற்காடு ஊராட்சித் தலைவர் ராமசந்திரனிடம் அதிரை பிறை சார்பாக தொடர்புகொண்டு பேசினோம்.
கிராமங்களை இணைத்தால் பேருந்து மறியல் செய்வோம். கிராம மக்கள் கொதித்துபோய் உள்ளார்கள். என்னிடம் தொடர்புகொண்டு அனைத்து மக்களும் இதுபற்றி கேட்கிறார்கள். நான் சொன்னாலும் கிராம மக்கள் ஏற்க மாட்டார்கள். தீர்மான நகலில் உள்ளபடி எந்த மனுவும் நகராட்சிக்கு கொடுக்கப்படவில்லை. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை நகராட்சியுடன் சேர்க்கக்கூடாது என்றுதான் மனு கொடுத்தோம்.
இது நடந்தால் குடிநீர் கட்டணம் மற்றும் அனைத்து வரியும் உயர்த்தப்படும். அதற்கான வருமானம் எங்களுக்கு இல்லை. இது நடந்தால் கிராம மக்கள் என்னை கொன்றுவிடுவார்கள். குடும்பத்துக்கே சாபம் விடுவார்கள். மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். நிச்சயமாக இதை அனுமதிக்க மாட்டோம்." என்றார்.