அதிரையுடன் 3 கிராமங்களை இணைப்பதற்கு ஊரே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு மாறாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் ஒரு சிலர், பிலால் நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்குவதை சுட்டிக்காட்டி, நகராட்சியில் இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படாது என உருட்டி வருகிறார்கள். ஏதோ அதிரையில் பாலாறும் தேனாறும் ஓடுவதைபோல..
உண்மையை சொல்லப்போனால் அதிரையின் பல வார்டுகளின் நிலை பிலால் நகரைபோன்றுதான் உள்ளது. குறிப்பாக சி.எம்.பி லேன், மேலத்தெரு, மர்யம் பள்ளித்தெரு, சுரைக்காய் கொல்லை, ஆலத்தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் முறையான சாலை வசதி இன்றி மழை தேங்கி காணப்படுகிறது. அந்த படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
இந்த படத்தில் இருப்பவை எல்லாம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள். அங்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை பற்றி நகராட்சிக்கு ஆதரவாக உருட்டும் நபர்கள் விளக்கம் கொடுப்பார்களா? ஒரு பகுதியில் சாலை, வடிகால் போன்ற அடிப்படை வசதி சரியில்லாமல் இருக்க காரணம், நகராட்சி, ஊராட்சி என்பது இல்லை. அங்கு ஆளும் ஆட்சியாளர்களை பொறுத்தது என்பதை இவர்கள் எப்போது உணரப்போகிறார்கள்.