அதிரையில் நடுரோட்டில் வாழை மரம் நட்ட மக்கள்! மழை நீர் தேங்கியதால் நாறும் நகராட்சி

Editorial
0
அதிரை நகராட்சிக்கு உட்பட்ட கடைத்தெரு தக்வா பள்ளி பின்புறம் உள்ள சாலையில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை கொண்ட பாதை முழுவதும் நீரில் மூழ்கி பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

இதனால் அப்பகுதி மக்கள், தொழுகைக்கு செல்பவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். வாகனங்கள்கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கி கிடக்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இந்த நிலையில், சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரில் வாழை மரத்தை நட்டு அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து நூதன முறையில் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...