அதிரை கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளி வாசலில் அறிவிப்பு செய்தும் யாரும் பெற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் அந்த பள்ளிக்கு ஜும்மா தொழுகைக்கோ அல்லது மற்ற நேரத்தில் சென்றபோதோ பணத்தை தவறவிட்டவர் என்றால் பள்ளி இமாமிடம் சென்று எவ்வளவு பணம் என்பதை தெரிவித்து பெற்றுக் கொள்ளவும் என்று குறிப்பிட்டு இருந்தோம். இந்த நிலையில் செய்தி வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் உரிய நபரை பணத்தை பெற்றுகொண்டார்.