அதிரை மக்களின் வாழைக்கன்று வைத்தியம் வெற்றி.. வழிக்கு வந்த நகராட்சி - என்னா ஸ்பீடு

Editorial
0
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டு அவை குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அந்த வகையில் கடைத்தெருவில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை கொண்ட பாதை முழுவதும் நீரில் மூழ்கி பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. 
இதனால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். வாகனங்கள்கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கி கிடக்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இது தொடர்பாக அதிரை பிறை தொடங்க நியூஸ் 18 வரை செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து அந்த இடத்தில் ஜல்லிக்கற்களை நகராட்சி நிர்வாகம் கொட்டிச் சென்றுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...