தாரூத் தஜ்வீத் வல் கிராத் (பேர்னாம்பட்) அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராத் போட்டி நடைபெற்றது. மொத்தம் 30 நபர்கள் இறுதிப்போட்டிக்கு நமதூரை சேர்ந்த நசீர் அகமது, அஹமது முகைதீன், பிலால் ஆகியோர் தேர்வாகினர்.
இறுதிப்போட்டியில் அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்த S.நசீர் அகமது, 3ஆம் பிடித்தார். சி.எம்.பி லேனை சேர்ந்த மருத்துவர் அஹமது முகைதீன் 6வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்த நிலையில் நசீர் அகமதுக்கு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.