அதேபோல் நமது பிரேக்கிங் நியூஸ் படத்திலும் இந்த படத்தை பயன்படுத்தி, FILE IMAGE என்று குறிப்பிட்டு இருந்தோம். இருப்பினும் சிலர் நமது குறிப்புகளை படிக்காமல், லிங்கை கிளிக் செய்யாமல் அதில் உள்ளவர்கள் அனைவரையுமே சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் அறிமுகமான காலத்தில் இருந்தே FILE என்று குறிப்பிட்டு படங்களை, காட்சிகளை பயன்படுத்துகிறார்கள்.
நாங்களும், மற்ற இணையதளங்களும் கூட பல முறை இவ்வாறு குறிப்பிட்டு உள்ளோம். எனவே மக்கள் அதற்கு பழகி இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், அந்த புகைப்படத்தில் உள்ள அனைவர் மீதும் கலங்கம் ஏற்படும் நிலை உள்ளதால் அந்த படத்தை உடனடியாக மாற்றி வேறு படத்தை வைத்துள்ளோம். அந்த படத்தில் இருப்பவர்களில் பலருக்கும் இன்றைய தீர்மானத்திற்கும் தொடர்பு இல்லை. அதிலுள்ள சில கவுன்சிலர்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.