அதிரை வண்டிப்பேட்டையில் திமுக முன்னாள் பொருளாளர் எஸ்.ஜே.சாதிக் பாட்சா அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருக்கு நிழற்குடை பேருந்து பயணிகளுக்கு ஒரு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பேருந்து நிலையம், சேர்மன் வாடி, காலேஸ் ஸ்டாப், ஷிபா மருத்துவமனை போன்ற எந்த ஸ்டாப்பிலும் இதுபோன்ற விசாலமான பேருந்து நிறுத்தம் இல்லை.
அப்படிப்பட்ட நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. காரணம் காலை முதல் இரவு வரை அங்கேயே படுத்துக்கிடக்கும் ஆட்களும், குடிகாரர்களும்தான். பயணிகள் அமரும் இருக்கைகளில் முகம் சுளிக்கும் வகையில் மதுபாட்டில்களை அப்படியே வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். சில சமயங்களில் தரையிலும், இருக்கையிலும் உடைந்த மது பாட்டில் கண்ணாடி துண்டுகள், சிகரெட் துண்டு போன்றவை கிடக்கின்றன.
இதனாலேயே வண்டிப்பேட்டையில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் இந்த நிறுத்தத்தில் அமராமல் வெயிலில் கால் கடுக்க காத்திருக்கிறார்கள். திமுக முன்னாள் பொருளாளரின் பெயரை காக்கவும், இந்த நிழற்குடையை பயணிகளுக்கு பயனுள்ளதாக்க குடிகார்களை இங்கு அனுமதிக்கக்கூடாது என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.