அதிரை வெறிநாயால் அடுத்த பயங்கரம்.. துடிதுடிக்க பறிபோன உயிர்

Editorial
0
அதிரையில் நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்து உள்ளது. தெருக்களில் கூட்டமாக நாய்கள் சுற்றி திரிகின்றன. இவை சாலையில் பயணிக்கும் மக்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு மிகவும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்கிழமை ஷிஃபா மருத்துவமனை அருகில் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டு இருந்த குழந்தையை 3 நாய்கள் கும்பலாக கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் மேலத்தெருவில் ஒரு ஆட்டையின் கழுத்தை கவ்வி வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளன. பதைபதைக்க வைக்கும் அந்த புகைப்படத்தை பிளர் செய்து வெளியிடுகிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகியுள்ளன. அதிரையில் நாய்களால் மனிதர்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...