அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே உள்ள வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 வெறி நாய்கள் கடித்துக் குதறி உள்ளன. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் காயமடைந்த குழந்தையை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
அதிரையில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை.
கடந்த மாதம் கூட இரவு அதிரை சேர்மன் வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட சாலையில் இரு சக்கர வாகனம் சென்றுகொண்டு இருந்தபோது நாய்கள் குறுக்கே புகுந்தன. இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுதாரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் அதிரை புதுமனைத் தெரு 4வது லைனில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று துரத்தி கடித்தது. அந்த பெண் கீழே விழுந்ததில் கை எழும்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.