அதிரையுடன் கிராமங்கள் இணைக்கப்படுமா? எம்எல்ஏ அண்ணாதுரை வெளியிட்ட அறிக்கை

Editorial
0
அதிராம்பட்டினம் நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏரிப்புறக்கரை, மழவேனிற்காடு, நரசிங்கபுரம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று காலை அதிரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை எம்.எல். ஏவுமான அண்ணாதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் நகராட்சியை சுற்றியுள்ள மழவேனிற்காடு, நரசிங்கபுரம், ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை மற்றும் தொக்காலிக்காடு ஆகிய ஊராட்சிகளின் சில பகுதிகளை இணைப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (நேற்று) அதிராம்பட்டிணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். பொதுமக்களின் உணர்வு களுக்கு மதிப்பளிக்கக்கூடிய மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சி மன்றங்களின் தீர்மானம் இல்லாமலோ, பொதுமக்களின் கருத்து கேட்காமலோ அரசு எந்த முடிவும் எடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு அது வரை அந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அமைதி காக்க கேட் டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...