கனமழையால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கியதாகவும், நகதாட்சியில் இதுகுறித்து புகாரளித்தும் ட்ந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி வாசி தெரிவிக்கிறார். தேர்தலுக்கு முன் அப்பகுதிக்கு வந்து தண்ணீரை வெளியேற்றிய கவுன்சிலர் தற்போது அப்பகுதிக்கே வரவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
மழை குறைந்த பிறகும் தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த பாதையை சுற்றியுள்ள சாலைகள் உயரமாக கட்டப்பட்டதால் இங்கு மட்டும் தண்ணீர் தேங்குகிறது. நீர் செல்வதற்கு முறையான வாட்டம் இல்லாததும், மழை நீர் வடிகால் சரியாக இல்லாததும், சாலை வசதி இல்லாததுமே தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
டெங்கு போன்ற நோய்கள் அதிகம் பரவி வரும் நிலையில், தேங்கி நிற்கும் இந்த தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக நடந்தும் வாகனங்களில் செல்லவும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.