இதற்கு அதிரை நகர மக்கள் மட்டுமின்றி இணைப்பதாக அறிவிக்கப்பட்ட கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். நேற்று ஆயிரக்கணக்கானோர் நகராட்சியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மக்கள் குப்பை கொட்டும் இடமில்லை, நகராட்சி அலுவலகம் கட்ட இடமில்லை, மக்கள் தொகை இல்லை என்றால் இதை ஏன் நகராட்சிதாக அறிவித்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் சாலை, வடிகால் தொல்லைகள் தீரவில்லை எனவும் நாய், பசு தொல்லை அதிகரித்து இருப்பதாகவும் கூறும் மக்கள், சொத்து வரி உயர்ந்தை தவிர நகராட்சியால் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்றும் பேசாமல் இதை பேரூராட்சியாகவே வைத்திருக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.