இது தொடர்பாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் இதையெல்லாம் கால்நடை வளர்ப்பவர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள். அசம்பாவீதங்கள் நடக்கும் முன் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரை பிறையில் தொடர்ந்து பதிவிட்டு வந்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாடால் அதிரையர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த நகராட்சி மாடு வளர்ப்பவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது. நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலை, பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த பசுக்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர். உரிமையாளர் வராவிட்டால் ஏலம் விடப்படும் என்று கூறப்படுகிறது.