அதிரையில் திமுக மீது அதிகரிக்கும் அதிருப்தி.. முன்னாள் அமைச்சர் முன் அதிமுகவுக்கு தாவிய திமுக நிர்வாகிகள்

Editorial
0
அதிராம்பட்டினம் அஇஅதிமுக நகர கழகத்தின் சார்பாக பூத் கமிட்டி மகளிர் அணி இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைக்கும் பணி அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு மற்றும் தரகர்தெரு பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் மாண்புமிகு S.வளர்மதி, அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சி.வி.சேகர், அதிராம்பட்டினம் நகர கழக செயலாளர்  A.பிச்சை, நகர துணைச் செயலாளர் M.A முகமது தமிம், நகர அவைத் தலைவர் தாவுத்கனி கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது அதிராம்பட்டினம் நகர 24 வது வார்டு திமுக பொருளாளர் சையது புகாரி அவர்களும், அதிராம்பட்டினம் நகர முன்னாள் திமுக மகளிர் அணி தலைவியும், ஹாஜா நகர் வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட வருமான தீம்சா அவர்களும் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் A. மலைஅய்யன்,  மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் அப்துல் வாஹிது, அலி அக்பர், லியாக்கத் அலி, யாகியாகான், பதுரூல் ஜமான், நிஜாமுதீன், ஹாஜா பக்ருதீன், முத்துக்கருப்பன், செல்வம், சாமிநாதன், சண்முகம், துரை முருகானந்தம், அசோக், சங்கர் , நாகேந்திரன், பாலகிருஷ்ணன், சம்சுதீன், ரியாஸ் ரபாபுதீன் மற்றும் கழக நிர்வாகிகளும், முன்னோடிகளும் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...