அதை தொடர்ந்து தனது கையில் வைத்திருந்த கூர்மையான ஸ்க்ரூ டிரைவரை எடுத்து அலி அக்பர் அவர்களின் தலையில் குத்திவிட்டு தப்பியோடினார்.. இதில் அலி அக்பர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில் கட்டுப்போடப்பட்டு உள்ளது.
இதனை நேரில் கண்ட அலி அக்பரின் உறவினர் ஷேக் அக்பர் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "அந்த ரயில் பெட்டியில்
ஏதோ பிரச்சனை நடப்பது தெரிந்தது. அடுத்த சில நொடிகளில் அவரை மூன்று முறை
முகத்தில் குத்தினார்.” என்றார்.
அலி அக்பர் கூறுகையில், “மூன்று, நான்கு முறை இந்த இடத்தில் தாக்கினார். ஆனால், காயம் ஆழமாக ஏற்படவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் காயங்கள் இல்லை என்றாலும் அச்சமாக உள்ளது. நாளை என்ன நடக்கும் என ஐயமாக உள்ளது. பிரம்மை பிடித்ததுபோல் உள்ளது." என்றார்
கொலம்பஸ் சர்கிள் 59வது தெரு வழியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூ டிரைவர் கைப்பற்றப்பட்டு உள்ளது. அலி அக்பர் இவ்வாறு தாக்கப்படுவது 2வது முறையாகும். கடந்த ஜூலை இதுபோல் அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் அவரது பல் உடைந்தது குறிப்பிடத்தக்கது.