அதிரையில் அதிகாலையே பரபரப்பு.. சி.எம்.பி வாய்க்கால் பள்ளத்தில் மாட்டிக்கொண்ட லாரி

Editorial
0
அதிரை சி.எம்.பி. லேன் பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பள்ளத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மணல் ஏற்றிக்கொண்டு 2 டாரஸ் லாரிகள் சி.எம்.பி லேன் வழியாக சென்றுள்ளன. அப்போது சி.எம்.பி வாய்க்கால் குறுக்கே நடந்து செல்லவும், இரு சக்கர வாகனம் செல்லவும் அமைக்கப்பட்ட பாலத்தில் ஒரு லாரி ஏற முயன்றபோது பள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்குள் ஜே.சி.பி வரவழைக்கப்பட்டு லாரி அங்கிருந்தது மீட்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள வீடு கட்டுமானப் பணிக்கு மணல் கொண்டு சென்ற லாரி என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், லாரி ஏறி உடைந்த சி.எம்.பி வாய்க்கால் பாலம் தங்களின் சொந்த செலவி கட்டப்பட்டது என்றும், இதேபோல் 3 முறை லாரி ஏறி பாலம் உடைந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...