அதிரையுடன் இணைக்க எதிர்ப்பு.. நகராட்சியை சுற்றி வளைத்து 5 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial
0
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் அதிரை நகர சபை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில், "நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புரக்கரை, 2) மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அதிரையோடு புதிதாக கிராமங்களை இணைப்பதை எதிர்த்து, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, மற்றும் பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் நகராட்சிக்கு நேரில் சென்று ஆணையரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் மாலை கூட்டம் கூடிய நிலையில், 7 கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், "அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு பொதுமக்களின் அவசர அத்தியாவசிய தேவைகளான சாலைகள் மேம்பாடு வடிகால் மேம்பாடு பணிகள் யாவும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சியின் வருமானத்தை பெருக்கும் வகையிலும் குடிநீர் திட்டப்பணிகள் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் அடிப்படை உளகட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் இந்நகராட்சியில் போதுமான இடம் இல்லாததால் மேற்படி பணிகளுக்கான அரசு நிதிஒதுக்கீடுகளை பெற இயலவில்லை. 

எனவே இந்நகராட்சிக்கு அருகில் உள்ள கிராமங்களை அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்கக்கோரி பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் கீழ்கண்ட கிராமப்பகுதிகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1) ஏரிப்புரக்கரை கிராம பகுதியில் இருந்து ஒரு பகுதியான ஆதிதிராவிடர் தெரு தொட்டியம்பள்ளி, பிலால் நகர், எம் எஸ்.எம். நகர். கே. எஸ்.ஏ. நகர், மேலத்தெரு மேற்கு பகுதி ஆகிய பகுதிகளின் உத்தேச மக்கள் தொகை 993யும்.

 2) மழவேனிற்காடு கிராமப்பகுதியில் இருந்து ஒரு பகுதி நடுவிக்காடு, மிலாரிக்காடு பாத்திமா நகர், சதாம் நகர் ஆகிய பகுதிகளின் உத்தேச மக்கள் தொகை 1113யும், மற்றும் 

3) நரசிங்கபுரம் கிராமப்பகுதியில் ஒரு பகுதியான முடுக்குக்காடு, வள்ளிக்கொல்லைக்காடு ஆகிய பகுதிகளின் உத்தேச மக்கள் தொகை 796யும் இவற்றின் மொத்த உத்தேச மக்கள் தொகை 2902 ஆகும். எனவே, மேற்கண்ட பகுதிகளை மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பார்வை-2ல் காணும் மன்ற தீர்மானம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மகிழங்கோடை, ஏரிப்புறக்கரை, தொக்காலிக்காடு, மழவேனிற்காடு, நரசிங்கபுரம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கிராம பகுதிகளை அதிரையுடன் இணைக்கும் அதிராம்பட்டினம் நகராட்சியை கண்டித்து இன்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகமே ஸ்தம்பித்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...