இது குறித்து தினகரன் வெளியிட்டு இருக்கும் செய்தியில் குறிப்பிட்டு உள்ளாதாவது, "அதிராம்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வேன் கவிழ்ந்து விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் மாடு குறுக்கிட்டதால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 9 பேருக்கு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிரை அருகே மாட்டினால் வேன் கவிழ்ந்து விபத்து.. 4 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயம்
November 30, 2023
0
அதிரை அருகே மாடு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் வேன் கவிழ்ந்து 4 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்து உள்ளதாக தினகரன் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.