அதில், "அதிராம்பட்டினம் நகராட்சி கடந்த 17.12.2021 முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் ந.க.எண்...950/2023/அ3, நாள்..17.10.2023 எண்ணிட்ட கடிதத்தில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற காரணிகள் மற்றும் வருவாய் வரவின் அடிப்படையிலும் இந்நகராட்சியின் தரம் உயர்த்திட கருத்துரு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.)ஏரிப்புரக்கரை, 2) மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நகராட்சி மக்கள் தொகை அதிகரிப்பதுடன், அந்த கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் அதிரையை பூர்வீகமாக கொண்ட மக்களுக்கான பிரதிநிதுத்துவம் அடிவாங்கும். நாளை அந்த கிராமங்களை சேர்ந்தவர்களே நகர தலைவராகவும், துணைத் தலைவராகவும் வருவதற்கான சூழல் ஏற்படலாம். ஏற்கனவே நகராட்சிக்கு தேவையான மக்கள் தொகை, வருவாய் அதிராம்பட்டினத்தில் உள்ளதால் 3 கிராமங்களையும் அதிரையுடன் இணைக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.