பட்டுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் அதிரை இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
150க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்கள், 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி - ஆட்கள் சேர்ப்பு, சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் போன்றவை இந்த முகாமில் வழங்கப்பட்டு உள்ளன.
தங்களுடைய பயோ - டேட்டா அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டா எடுத்து வர வேண்டும். மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதிரையில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்காணும் பார்மில் உங்கள் பெயர், வயது, கல்வி தகுதி, முகவரி, தொடர்பு எண்ணை அனுப்பி முன்பதிவு செய்யவும்.