அதிரையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக SDPI ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Editorial
0
பாலஸ்தீனின் நிலங்களை ஆக்கிரமிக்க அந்நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதனை தொடர்ந்து பாலஸ்தீனுக்கு எதிராக போரை அறிவித்து காசாவ மீண்டும் நர வேட்டையாடி வருகிறது இஸ்ரேல்.

இந்த நிலையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக அதிரையில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டத்தை அறிவித்து உள்ளது.  இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், "தாய் நாட்டிற்கான போராட்டம் பாலஸ்தீனியர்களின் உரிமை! சுதந்திர பாலஸ்தீன நாட்டுக்காக உலக நாடுகள் தலையிட வேண்டும்! பாலஸ்தீனத்துடன் இந்தியா! பாலஸ்தீன மக்களுக்கான இந்தியா ஆதரவை தொடர்வோம்! SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் நடத்தும் 
கண்டன ஆர்ப்பாட்டம்.

தலைமை : M.முகமது ரஹீஸ் 
மாவட்ட தலைவர்

கண்டன உரை : A.அபுபக்கர் சித்தீக்
மாநில செயலாளர்

தேதி: 14-10-2023
நாள் : புதன் கிழமை
நேரம்: மாலை 4.30 மணி 
இடம்:  பேருந்து நிலையம் 
            அதிராம்பட்டினம்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஜமாத்தார்கள், அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், அனைத்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கலந்துக்கொண்டு கண்டனத்தை தெரிவிக்க அழைக்கின்றது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...