அதிரையில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணியளவில் அதிரை சேர்மன் வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட சாலையில் இரு சக்கர வாகனம் சென்றுகொண்டிருந்தபோது நாய்கள் குறுக்கே புகுந்தன. இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுதாரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே பகுதியில் ஏராளமான மாடுகளும் நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த மாதம் புதுமணை தெரு 4வது லைனில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று துரத்தி கடித்தது. அந்த பெண் கீழே விழுந்ததில் கை எழும்பில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. ஆனால், தெரு நாய்களை ஒழிக்க நகராட்சி நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
பொதுமக்கள் பயமின்றி தெருவில் நடந்து செல்ல நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்களின் கேட்டுக்கொண்டு உள்ளனர்.