இது தொடர்பாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் இதையெல்லாம் கால்நடை வளர்ப்பவர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய தாயுடன் பள்ளிக்கு சென்ற சிறுமியை வெறிபிடித்த மாடு முட்டி வீசி படுகாயமடைந்த வீடியோவை பலரும் பார்த்திருப்போம். அதுபோன்ற சம்பவம் அதிரையில் நடக்காமல் இருக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துகள் மற்றும் பொருட்கள் சேதம் ஏற்பட காரணமாகவும் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் பொது சுகாதார விதிகள் மற்றும் 1997 ம் வருடத்திய தமிழ்நாடு நகர்ப்புறப் பகுதி கால்நடைகள் மற்றும் பறவைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 3,10(1), 10(3) மற்றும் 10(4) சட்டத்தின்படி கைப்பற்ற முடியும்.