மறுபக்கம் அப்பகுதி பெண்கள் 2வது வார்டு கவுன்சிலர் சித்தி ஆயிஷா அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று 2வது வார்டு மக்கள் வேன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரளாக சென்று ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர். மக்களின் தேவைகளை விரிவாக கேட்ட ஆட்சியர் உடனே நகராட்சி ஆணையருக்கு வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அங்கிருந்த நகராட்சி அதிகாரியை அழைத்து இந்த அடிப்படை தேவைகளை கூடவா இன்னும் செய்யவில்லை என கடிந்துகொண்டார். அவரிடம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன், நேரில் வந்து ஆய்வு செய்வதாக மக்களிடம் உறுதியளித்தார்.
அதிரையில் இருந்து தஞ்சை சென்று கலெக்டரிடம் புகாரளித்த சி.எம்.பி லேன் மக்கள்.. நகராட்சி அதிகாரிக்கு விழுந்த குட்டு
October 16, 2023
0
அதிராம்பட்டினம் 2வது வார்டை நகராட்சி நிர்வாகம் உட்கட்சிப் பூசல் காரணமாக புறக்கணிப்பதாக கூறி குற்றம்சாட்டி வரும் அப்பகுதி மக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று, நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.எம்.ஏ ஆகியோரிடம் புகாரளிக்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி சி.எம்.பி லேன் மக்கள் திரளாக சென்று நகராட்சி ஆணையர், நகராட்சித் துணைத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.