அதிரைக்கு எம்பி பழனிமாணிக்கம் செய்தது என்ன.. நான்கரை ஆண்டு பணி பற்றி வெள்ளை அறிக்கை வருமா?

Editorial
1 minute read
0
தஞ்சாவூர் மக்களவை தொகுதிக்குள் அதிராம்பட்டினம் வருகிறது. அதிராம்பட்டினம் மக்களுக்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. தஞ்சை எம்பியாக முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இருந்து வருகிறார். டெல்டா மண்டலத்தில் திமுகவின் பலம் வாய்ந்த தலைவராக இவர் இருந்து வருகிறார். 

ஆனால் அதிராம்பட்டினத்துக்கு இவர் என்ன செய்தார் என்று கேட்டால் மக்கள் முழிக்கவே செய்கிறார்கள். கட்சிக்காரரர்களின் திருமண நிகழ்வுகளை தவிர இவர் அதிரை பக்கமே வரவில்லை என மக்கள் குமுறுகிறார்கள். மதுரை எம்பி சு.வெங்கடேசன், திமுக மாநிலங்களவை  உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, எம்.பி செல்வராஜ், திமுக தருமபுரி எம்பி செந்தில்குமார் என பல எம்பிக்கள் ரயில்வே உட்பட தொகுதி கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். 

அவர்களை ஒப்பிடுகையில் தஞ்சை எம்பி பழனிமாணிக்கம் அதிராம்பட்டினம் ரயில் பயணிகளின் கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக எம்பி பழனிமாணிக்கம் அதிராம்பட்டினத்துக்காக என்ன செய்தார்?

எம்பி நிதியில் அதிராம்பட்டினத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? அதன் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?

மக்களவையில் அதிராம்பட்டினம் தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் கோரிக்கை தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? 

என்பன தொடர்பாக தஞ்சை எம்பி பழனிமாணிக்கம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Post a Comment

0Comments
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...