அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல்.. உடனே வந்த கரண்ட்! மறியல் நின்றவுடன் மீண்டும் பவர் கட்

Editorial
0
மதுக்கூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக  முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை,  மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டது.
5 மணிக்கு போன மின்சாரம் 8.10 மணி வரை வராததால் மக்கள் கொந்தளித்தனர். ஒவ்வொரு மாதமும் தாமதமாக மின்சாரம் வழங்கப்படுவதை பொறுத்து பொறுப்பு பார்த்த மக்கள் இன்று பொங்கி எழுந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகே 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு பேருந்தை மறித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சில நிமிடங்களில் மின்சாரம் வந்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் நின்ற சில நிமிடங்களிலேயே மீண்டும் மின் தடை செய்யப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...