தமிழ்நாடு அரசே சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால், அவரது ஆட்சிக்கு கீழ் நடைபெறும் சாலை திட்டங்களில் அவரது உத்தரவுக்கே மதிப்பளிக்காமல் இதுபோன்று தரமற்ற சாலைகளை அமைத்தார்கள்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் உயரமாக சாலை அமைத்த காரணத்தால் தற்போது பெய்த மழைக்கு சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இரவு பெய்த கனமழை காரணமாக சேர்மன் வாடியில் இருந்து செக்கடிமேடி செல்லும் இணைப்பு சாலையின் முகப்பில், HITACHI ATM அருகே குளம்போல் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அவ்வழியாக பைக்கில் சென்ற முதியவர் தேங்கிய தண்ணீரில் கீழே விழுந்தார். அவரை அங்கிருந்த மக்கள் தூக்கிவிட்டனர். அதை தொடர்ந்து அப்பகுதி மக்களே வாலியில் தண்ணீரை அப்புறப்படுத்தி வருகிறார்கள்.