அதிராம்பட்டினம் 2வது வார்டை நகராட்சி உட்கட்சிப் பூசல் காரணமாக நகராட்சி நிர்வமாக புறக்கணிப்பதாக கூறி அப்பகுதி மக்களே தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
சாலை, கழிவு நீர் வடிகால், தெரு விளக்குகள், சி.எம்.பி வாய்க்கால் பராமரிப்பு, வெறிநாய்களை கட்டுப்படுத்துவது போன்ற அடிப்படை தேவைகள் எதையும் நகராட்சி முறையாக செய்யவில்லை என்றும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஹனீப் பள்ளியில் 2வது வார்டு மக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி இரண்டாவது வார்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரி செலுத்துவோரின் கையொப்பம் பெற்று இன்று காலை ஹனீப் பள்ளியில் இருந்து மக்கள் நகராட்சி அலுவலகம் சென்று ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதை அடுத்து வரும் 9ம் தேதி 2வது வார்டு மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் மற்றும் ஆர்.டி.எம்.ஏ.வை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.