அதிராம்பட்டினத்திற்கு இரயில் சேவை தொடங்கி 121 ஆண்டுகள் நிறைவுற்று இன்றுடன் 122 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் அதன் வரலாற்றை பார்ப்போம்.
தென்னிந்திய ரயில்வே கம்பெனி 1890 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது .
02.04.1894 ம் தேதி மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை வரை மீட்டர்கேஜ் இரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது.
பிறகு 20.10.1902 ஆம் தேதி முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரை மீட்டர் கேஜ் இரயில் அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 31. 12 .1903 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வரை இரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது .
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது மண்ணின் மைந்தர் சுதந்திர இந்தியாவின் முதல் இரயில்வே இணை அமைச்சர் அமைச்சர் அமரர் கும்மட்டிதிடல் க.சந்தானம் அவர்களின் முயற்சியால் 29.03.1952 ஆம் தேதி அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது.
இவ்வாறாக மயிலாடுதுறை - திருவாரூர் - முத்துப்பேட்டை - அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி காரைக்குடி இரயில் பாதை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. அக்டோபர் மாதம் 20ம் தேதியான இன்று அதிராம்பட்டினம் இரயில் தினமாக கொண்டாடலாம்.