அதிரை வழியாக செல்லும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் வண்டி எண் 16361 & 16362 ஐ நிரந்தர சேவையாக தெற்கு ரயில்வே மாற்றியது.
இந்த ரயில் 28/08/2023 முதல் 18/09/2023 வரை 16361 & 16362 என்ற எண்ணில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் திருத்தப்பட்ட நிறுத்தங்களுடன் நிரந்தர சேவையாகவும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 06035 & 06036 என்ற எண்ணில் வழக்கமான நிறுத்தங்களுடன் சிறப்பு ரயிலாகவும் இயக்கும்.
25/09/2023 முதல் திருத்தப்பட்ட நிறுத்தங்களுடன் வாரமிருமுறை நிரந்தர சேவையாக இயங்கும். எர்ணாகுளம்
ரயில் நிரந்தர சேவையாக மாற்றப்படுவது மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், திருவாரூர் - காரைக்குடி பாதையில் இந்த இரயில் ஏற்கனவே நின்று சென்ற நிறுத்தங்களான அதிராம்பட்டிணம் மற்றும் பேராவூரணி நிறுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஏற்கனவே வெளியான அறிவிப்பை ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டு உறுதிபடுத்திய பிறகு அதிரை பிறை அதிரை செய்தியாக வெளியிட்டது. ஆனால், ஒரு தரப்பினர் நாம் தவறான செய்தியை வெளியிட்டதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில் தற்போது முழு விபரத்தையும் வெளியிட்டு உள்ளது ரயில்வே.
பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருந்த ரயில் நின்று நிறுத்தங்களை மீண்டும் வழங்க வேண்டும் அதிரை பிறை தரப்பிலும் தொடர் செய்திகளை வெளியிட்டோம். அதிரை நல்வாழ்வு பேரவை ரயில் போராளி அஹமது அலி ஜாபர், அதிரை, பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கமும் தொடர் கோரிக்கைகளை கொடுத்து வந்தன.
அதன் காரணமாக அதிராம்பட்டினத்தில் ரயில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அதிரையில் இந்த ரயில் எப்போது நின்று செல்லும் என்ற அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, திங்கள் சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 2.28 மணியளவில் அதிரைக்கு இந்த ரயில் வந்தடையும். அதேபோல் செவ்வாய், ஞாயிறு ஆகிய நாட்களில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு வரும் எர்ணாகுளம் நோக்கி செல்லும் ரயில் அதிரையில் இரவு 9.10 மணிக்கு நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.