இந்த நிலையில், இன்று காலை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 30 துப்புரவு பணியாளர்கள் மொத்தமாக 6வது வார்டுக்கு அனுப்பப்பட்டு தூய்மை பணி மேற்கொண்டனர். குப்பை அள்ளும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாக நிரப்பி அனுப்பப்பட்டன. கழிவு நீர் வடிகால் அடைப்பு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டது.
அத்துடன், கொசுத் தொல்லையை கட்டுப்பட்ட கொசு மருந்தும் அடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி தூய்மையாக மாறி இருக்கிறது. அதே நேரம் ஆலடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை எடுத்து செல்லாமல் அங்கேயே எரித்ததால் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோல் எப்போதவது செய்யாமல் முறையாக சாலையில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தினமும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுபற்றி வார்டு கவுன்சிலர் கனீஸ் பாத்திமாவின் கணவர் காமில் நம்மிடம் தெரிவிக்கையில், "நேற்றைய தினம் நகராட்சி நிர்வாகத்திடம் நான் ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். நமது ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்தமாக துப்புரவு பணிகள் நடைபெற வேண்டும் என்று. எனது கோரிக்கையை ஏற்று இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் நகராட்சி ஊழியர்கள் 30 பேர்களைக் கொண்டு ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்தார்கள்."