ராமேஸ்வரம் - செகந்திராபாத் ரயில் அதிராம்பட்டினம் வழியாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை இந்த ரயிலில் பயணித்த பயணிகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த வருமான விபரத்தை ரயில்வே வெளியிட்டு உள்ளது.
வாரம் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரயிலில் திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் ரூ.29,19,185,
மயிலாடுதுறைக்கு ரூ.11,21,423, சென்னைக்கு ரூ.54,68,868 வருமானம் கிடைத்துள்ளது. தாம்பரத்தில் நிறுத்தம் இல்லாத இந்த ரயிலை அதிரை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுதுவிட்டு ஏராளமானோர் இதில் சென்னை நோக்கி செல்கிறார்கள்.
இதில் ரயில் நிலையங்கள் வாரியாகவும் வருவாய் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிராம்பட்டினம் ரயில் நிலையம் மூலம் ரூ.4,05,552 வருவாய் கிடைத்துள்ளது. இது திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் மூலம் கிடைத்த வருவாயைவிட அதிகம்.
எனவே வருவாய் அதிகமுள்ள பயணிகள் அதிகம் சென்றுவரும் அதிராம்பட்டினத்தில் தாம்பரம் - செங்கோட்டை ரயிலை நிறுத்த வேண்டும் என்றும், ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயிலை நிரந்தரமாக்கி வாரந்தவேஓறும் கூடுதல் சேவைகளை வழங்குவதுடன், அதிராம்பட்டினத்தில் நின்று செல்லும் வகையில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் நீட்டிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.