அதிரை பத்திரிகையாளர் பாதுகாப்பு, உரிமையை உறுதிபடுத்துவோம் - APPC ஆலோசனையில் தீர்மானம்

Editorial
0


அதிரையில் இயங்கி வரும் உள்ளூர் இணைய ஊடகங்களையும், அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் உரிமைகளையும்,  பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டது ADIRAI PRESS PROTECTION COUNCIL.

இதன் முதல் நேரடி மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று அதிரை அரேபியன் பேலஸில் நடைபெற்றது. இதில்  அதிரையை சேர்ந்த முன்னணி இணைய ஊடகங்களான  அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை, டைம்ஸ் ஆப் அதிரை, அதிரை இதழ் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன:
▶சங்கத்தின் நிர்வாகிகள் மாதம் நடைபெறும் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.
▶நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு சங்க அலுவலகம், அமைப்பை பதிவு செய்தல், அமைப்பு சந்தா போன்றவை குறித்து முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
▶செய்திகளை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் மிரட்டல், அச்சுறுத்தல், தாக்குதல், வழக்குகளுக்கு உள்ளானால் ஊடக வேற்றுமைகளை கடந்து அவர்களுக்கு உறுதுணையாக சங்கம் நிற்கும் என முடிவெடுக்கப்பட்டது.
▶பத்திரிகையாளர் என்று சொல்லி பணம் கேட்டாலோ, மிரட்டினாலோ, கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது புகாரளிக்க தனி தொடர்பு எண்ணை சங்கம் சார்பில் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது.
▶வாராந்திர செய்தி கலந்துரையாடல் கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடத்தவும், மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தை அந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடத்தவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
▶பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பும் உரிமையும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு சுயமரியாதையும் முக்கியம். அதை உறுதிபடுத்த 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. அவசர செய்திகள், மரண அறிவிப்பு, மக்கள் நலன், பேரிடர் கால செய்திகளை தவிர்த்து, முறையான அழைப்புகள் இல்லாத அரசு, கட்சி, அமைப்பு, முஹல்லா, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அணிகளின் நிகழ்வுகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2. நிகழ்ச்சியின் வரவேற்புரை மற்றும் நன்றியுரைகளில் செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களை யாரும் குறிப்பிடுவதில்லை. அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
▶அனைத்து ஊடகங்களும் பொருளாதார அடிப்படையில் வலுவாக இருந்தால் மட்டுமே நெடுங்காலத்துக்கு செயல்பட முடியும். எனவே ஊடகங்களில் வெளியிடப்படும் நிறுவன விளம்பரங்கள், தொடக்க விழா, சலுகை போன்ற பதிவுகள், கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா, விளையாட்டு அறிவிப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகள் சார்ந்த அறிவிப்புகளை விளம்பரமாகவே கருத வேண்டும் என்றும், அதற்காக ஒவ்வொருரு பதிவுக்கும், வீடியோ, இணையத்தில் ஒரு இடத்தில் வைக்கப்படும் விளம்பரத்துக்கும் கூடுதக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
▶விளம்பரங்களுக்கு பெறப்படும் குறைந்தபட்ச தொகையை அதிகரித்து அனைத்து ஊடகங்களும் ஒரு தொகையை நிர்ணயிக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
▶சங்கம் சார்பில் கட்டணம் பெற்றுக்கொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்த ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
▶காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அதிரை பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் தொடர்பான அறிமுகத்தை கொடுத்து, இனி காவல் நிலைய செய்திகளை தவறாமல் அதிரையின் உள்ளூர் ஊடகங்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
▶சங்கத்தின் முடிவுகள், நடவடிக்கைகள் ஊடகங்கள், பத்திரிகையாளர்களின் உரிமை, பாதுகாப்பை உறுதி செய்யவே அன்றி எந்த வகையிலும் எந்த தனிப்பட்ட ஊடகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்காது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...