அதாவது ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹30 ஆயிரம் கிடைக்கும். இதில் பரிந்துரைப்பவர்களுக்கு போனஸும் உண்டு எனக் கூறியுள்ளனர். இதற்கு ஆசைப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடாக கொடுத்துள்ளனர்.
அதிரையிலும் ஏராளமானோர் நியோ மேக்ஸில் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளனர். இப்படி அதிரையில் இருந்து மட்டும் கோடிக்கணக்கில் முதலீடு சென்றுள்ளது. இந்த நிலையில் பணத்தை பெற்றுக்கொண்டு வட்டியும் முதிர்வுத்தொகையும் தரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அதன் இயக்குநர்கள், முகவர்களைக் கைது செய்ய பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதே நியோ மேக்ஸ் நிறுவனம் பல பெயர்களில் தொடங்கிய நிறுவனங்களே 50 க்கு அதிகமாக இருக்கும் என்றும், அதில் ஏமாந்தவர்கள் 3 லட்சத்துக்கும் மேல் இருப்பார்கள் என்றும், அவர்களின் மோசடி செய்த தொகை 40,000 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஹலால் ஹராம் தெரியாமல் உழைக்காமல் லாபம் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு வட்டியில் விழுந்து லட்சங்களையும் கோடிகளையும் இழந்து தவிக்கின்றனர் அதிராம்பட்டினம் மக்கள்.