அதிரையில் 3 மீன்கள் ₹16,000 க்கு ஏலம்.. வதந்தி பரப்பியதா அதிரை பிறை? இவ்வளவு விலை ஏன்?

Editorial
0
அதிரை தக்வா பள்ளி பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று 3 மீன்கள் ₹15,995 க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தோம். பலரும் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வியப்பை வெளிப்படுத்தினர். அதே நேரம் ஒரு சிலர் போலித்தனங்களை நாம் பரப்பியதாக அறியாமையில் பதிவிட்டு வருகிறார்கள். 

இந்த வீடியோவை பதிவு செய்தவரின் பெயரை கூட நான் Courtesy ஆக வெளியிட்டு இருக்கிறோம். முழுக்க முழுக்க உண்மையான வீடியோ அது. இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்ட மீனின் பெயர் கூரை கத்தாலை. கருவாடு  தயாரிக்க பயன்படுத்தப்படும் இந்த மீன் இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்ட காரணம் அதன் வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற பொருள். 

மீனுக்கு மிதவை தன்மையை தரும் இந்த நெட்டி மருத்துவ தன்மை வாய்ந்தது என்றும், அதன் சந்தை மதிப்பு எடைக்கு ஏற்ப பல்லாயிரம், பல லட்சம் மதிப்பில் விற்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்று இதேபோல் மீன் ₹50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டதாக தன்னுடைய நண்பர் கூறியதாக இந்த வீடியோவை பதிவு செய்த ஹாஜா முகைதீன் தெரிவிக்கிறார்.

இன்று மீனை இத்தனை ஆயிரத்துக்கு வாங்கியவர்கள் நெட்டியை எடுத்துவிட்டு ₹1000 க்கு மீனை விற்றதாக அவர் நம்மிடம் தெரிவித்தார். இந்த நெட்டியின் மூலமாகவே ஏராளமான மீனவர்கள் பல லட்சங்களை சம்பாதித்து இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

அதிரை பிறை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவின் கீழ் ஹாஜா முகைதீன், "இந்த மீன் பெயர் கூரகத்தாழை, இந்த மீனில் சிறிய மீன்கள் ஒரு கிலோ 250லிருந்து 300 வரை தற்பொழுது விலை போகிறது. சுமார் 3 கிலோவிற்கு மேல் உள்ள மீன்களில் நெட்டி என்ற உறுப்பு வெள்ளை நிற பலூன் போன்று இருக்கும். இதன் விலை 100 கிராம் 10000 லிருந்து 20000 வரை விற்பனையாகிறது. இதில் ஆண் மீன்களுக்கு அதிக விலை. இந்த நெட்டி மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...