அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஹஜ் பெருநாள் மறுநாளான இன்று "யூத் மிலன்" என்ற பெயரில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி மற்றும் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் பேரில் முதல் நாளான இன்று 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 8 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், ஸ்லோ சைக்கிள் ரேஸ், லெமன் இன் தி ஸ்பூன், பிஸ்கட் கடித்தல், தண்ணீர் நிரப்புதல், இன் அண்ட் அவுட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர். வீடியோ கேம்களில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களை உடல் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தும் விதமாகவும், ஹஜ் பெருநாளை சமூகமாக சுமூகமாக கொண்டாடும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சிறுவர்களின் விளையாட்டுத் திறன் முற்றிலுமாக வெளிப்பட்டது. மிகவும் உற்சாகமாக அவர்கள் இதில் கலந்துகொண்டனர். இறுதியாக போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நாளை நடைபெறும் யூத் மிலன் அனைத்து முஹல்லா இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சியில் இன்றைய போட்டிகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.