அதிராம்பட்டினம்: நோன்பு பெருநாள் முடிந்த பிறகு அதிரை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாமுக்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்து இருக்கிறது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் "இன்ஷா அல்லாஹ்.. வரக்கூடிய நாளை (ஏப்ரல் 29ஆம் தேதி சனிக்கிழமை) காலை 9:30 மணியளவில் நம் முஹல்லாவிற்கு உட்பட்ட நம்முடைய சங்க வளாகத்தில் மாபெரும் கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது.
இதில் 8ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக அவர்களுடைய எதிர்கால கல்வி குறித்து மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்க இருக்கிறோம். அதில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் வாருங்கள் நல்லதொரு சமூகம் படைப்போம்.." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.